புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.
காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப் பதிவிற்காக 32 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்தும் வாக்குச் சாவடி மையங்களில் தயார் நிலையில் உள்ளன.
பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் ஒரு கம்பெனி துணை ராணுவ படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு காமராஜ் நகர் தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலையொட்டி, புதுச்சேரி முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post