காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து 15 ,000 கன அடியாக குறைந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததாலும், பிலிகுண்டுலுவிற்கு நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 250 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116 புள்ளி 27 அடியாகவும், நீர் இருப்பு 88 புள்ளி 826 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 350 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தைக் காட்டிலும், நீர் திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது.
Discussion about this post