விக்கிரவாண்டியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலினின் பேச்சில் தெளிவு இல்லை என்றும் தமிழக அரசு, தொழில்துறையில் அதிக முன்னேற்றங்களை கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதேபோல், நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு என்று கூறினார். மேலும், அதிமுக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியால் மின்சார தட்டுப்பாடு முற்றிலும் போக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதேபோல், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆதிதிராவிட துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த சமூகத்தினருக்கு பயன்படுத்தாமல் ஓட்ட டிவி கொடுத்த அரசு தான் திமுக, என விமர்சனம் செய்துள்ளார். மேலும், திமுகவின் திட்டங்களில் மக்களுக்கு பயனில்லை என தெரிவித்தார்.
Discussion about this post