உணவு கழிவுகளை பையோ கேஸ் முறையில் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசின் பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்….
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், உணவு கழிவுகளை கொண்டு பயோ கேஸ் உருவாக்கும் திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரண்ட் பகுதிகளிலும் செயல்பட்டுவரும் பயோ கேஸ் திட்டங்களை, மத்திய அரசின் பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இது பற்றி பேசிய விஞ்ஞாணி டேனியல் செல்லப்பா, சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கும் வகையில் மக்கும் குப்பையின் மூலப்பொருட்களை கொண்டு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று கூறினார்.
இங்கு, பழைய உணவுக் கழிவுகளை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்து பயோ கேஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு டன் மக்கும் குப்பையில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
பொதுவாக அனைத்து வீடுகளில் இருந்து எடுக்கப்படும் குப்பைகளில் மக்கும்
குப்பைகள் தனியாகத் தரம்பிரித்து எடுக்கப்பட்டு, இந்த பையோ கேஸ் திட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதிலிருந்து வெளியேற்றப்படும் மக்கும் குப்பைகள் இயற்கை உரங்களாக மாற்றப்பட்டு அருகிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மிகச்சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களில் இந்த பயோ கேஸ் உருவாக்கும் இடங்களுக்கு அருகிலேயே ஹோட்டல் அமைக்கப்பட்டு, அவைகளுக்கு இந்த பையோ கேஸ் வழங்கப்படும் என்று டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
Discussion about this post