உடலுக்கு தீங்கு விளைவிக்காத ,மாசு இல்லா காய்,கறிகளை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு இலவசாமக வழங்கி வருகிறார் மூதாட்டி ஒருவர் அவரை பற்றி செய்தி தொகுப்பு.
கோயம்புத்தூர் அருகே உள்ள தொப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் 82 வயதாகும் நஞ்சம்மாள். இவர் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை முறை காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்.
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மறந்து, ஓடி ஓடி உழைக்கும் இந்த கால மக்களுக்கு, ரசாயணங்கள், அம்மோனியா இல்லாத காய்கறிகளை தன் தோட்டத்தில் இருந்து இலவசமாக
வழங்குவதோடு, அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக , காய் கறி நாற்றுகள் மற்றும் விதைகளை வழங்கி வருகிறார் . வயதான போது சோர்ந்து வீட்டில் முடங்கி விடாமல் , தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்ய வேண்டும் , என்னும் நோக்கத்தில் போராடி வருகிறார் இம்மூதாட்டி. மேலும் அப்பகுதியில் வெற்றிகரமாக 37 வீடுகளில் காய்கறி தோட்டத்தையும் அமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தினமும் அங்குள்ள வீடுகளுக்கு சென்று செடிகளை பராமரிக்க உதவுவதோடு இயற்கை உரங்களை வழங்கி நஞ்சில்லா காய்கறிகளை கிடைக்க செய்கிறார் அம்மூதாட்டி, இதனால் அப்பகுதியில் இவர் காய் கறி பாட்டி என்றும் பாசமாகப் அழைக்கப்படுகின்றார்.
பொதுநலனுடன் சேவை ஆற்ற வயது எப்போதுமே தடையில்லை , மனம் இருந்தால் போதும் என சொல்லி மெய்சிலிர்க்க வைக்கிறார் நஞ்சம்மள் பாட்டி
Discussion about this post