சென்னையை சேர்ந்த தொழிலதிபர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர ஒட்டியாணத்தை உபயமாக வழங்கியுள்ளார். கமலா சினிமாஸ் உரிமையாளரான வள்ளியப்பன், நாகப்பன் மற்றும் கணேசன் குடும்பத்தினர் சார்பாக வைர ஒட்டியாணம் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 180 கிராம் எடை கொண்ட 15 கேரட் வைரகற்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை விஷேச பூஜையின்போது மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல், வைரமூக்குத்தி சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Discussion about this post