இஸ்லாமிய சமுதாயத்தை, தான் எப்போதும் தவறாக பேசியதில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தன் மீதான அவதூறு குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் அதிமுக பக்கம் திரும்பியுள்ள நிலையில், வாக்கு வங்கிக்காகத் தன் மீது வேண்டுமென்று அவதூறு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Discussion about this post