36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. யாழ்ப்பாணம் சென்ற விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து 225 கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இலங்கை அரசு 195 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததிருந்த நிலையில், இந்தியா 30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், விமான நிலையம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விமான நிலையத்தை திறந்து வைத்தனர். 36 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இன்று தொடங்கியது. யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்ற விமானத்திற்கு, தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Discussion about this post