தீபாவளியை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி பகுதியில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள எல்லப்பன்பேட்டை, ஆடூர், வீனங்கேணி, சத்திரம் ஆகிய கிராமங்களில் தமிழக அரசு அனுமதி பெற்று பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பட்டாசு தொழிலை நம்பி, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் தீபாவளிப் பண்டிகை வர இருப்பதை முன்னிட்டு பட்டாசு உற்பத்தியாளர்கள் மும்மரமாக வேலை செய்து வருகின்றனர்.
இவ்வருடம் தீபாவளிக்கு, அதிகம் சப்தம் இல்லாமல் வெடிக்க கூடியதும், இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாததுமான பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Discussion about this post