ஆரணியில் சொட்டு நீர் பாசனம் மூலம் புடலங்காய் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், அதிக மகசூலும், லாபமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை காலத்தில், தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி, ஆரணி ஒன்றியத்தில் உள்ள அரியப்பாடி,அக்ராப்பாளையம், முள்ளண்டிரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலமாக புடலங்காய் விதைகள் நடவு செய்ததில் தற்போது நல்ல மகசூல் கிடைத்து வருகிறது.
விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒன்று முதல் மூன்று ஏக்கர் நிலத்தில் புடலங்காயை சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம், ஒரு ஏக்கருக்கு தலா 15 டன் வரை மகசூல் கிடைப்பதால் ஏக்கருக்கு ஒன்றறை லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
மேலும், புடலங்காய் கொடிகளுக்கு இடையே ஊடுபயிராக கொத்தவரங்காய், தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றையும் பயிர் செய்து லாபம் பெற்று வருகின்றனர்.ஆரணி ஒன்றிய தோட்டக்கலை துறை சார்பில் பயிர் செய்து வரும் 25% விவசாயிகள், அவர்கள் கூறும் வழிமுறைபடி சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
Discussion about this post