ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்கி பகவான் மகனான கிருஷ்ணாஜி தலைமையில் இயங்கும் அனைத்து ஆசிரமங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் உள்ள அலுவலகம் மற்றும் ஆலயம் உட்பட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரமத்தின் தலைமை அதிகாரியான லோகேஷ் தாசாஜி மற்றும் ஊழியர்களிடம் நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று சென்னை நுங்கம்பாக்கம் சபி முகமது சாலையில் அமைந்துள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாவின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post