மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,594 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,237 கன அடியில் இருந்து, 6,594 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.06 அடியாகவும், நீர் இருப்பு 82.832 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே, பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post