இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தேசங்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதால் அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர், கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலை புலிகள் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பிரேதசங்களின் முன்னேற்றத்தில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றார். நாட்டின் ஏனைய பகுதிகளை விட இந்தப் பகுதிகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டார்.
Discussion about this post