உல்லாச உலகம் பகுதியில் , உலகின் மிகப்பெரிய நாடு ரஷ்யா குறித்து பார்க்கலாம்..
பரப்பளவை பொருத்தவரை உலகின் மிகப்பெரிய நாடு ரஷ்யா.. இதன் பரப்பு எவ்வளவு தெரியுமா.. ஒருகோடியே 70 லட்சத்து 98 ஆயிரத்து 246 சதுர கி.மீ…. நாட்டின் சுற்றளவு 20,241 கி.மீ. ஆகும்.. ரஷ்யாவில் மட்டும் 9 டைம் zone கள் உள்ளன. ஆனால் மக்கள் தொகை வெறும் 14 கோடியே 25 லட்சம் ஆகும். மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 73 சதவிகிதம் பேர், நகர்பகுதிகளில் தான் வசிக்கின்றனர். Norway, Finland, Estonia என 14 நாடுகளோடு எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது ரஷ்யா… உலகில் வேறெந்த நாட்டிற்கும், இத்தனை நாடுகளோடு எல்லை தொடர்பு இல்லை..
உலக பணக்காரர்களில் 74 பேர் மாஸ்கோவில் தான் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக 8 வது இடத்தில் மிக வளர்ந்த நாடாக இருந்தாலும், ரஷ்யாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
உலகின் மிக நீண்ட பெரிய ரயில் வழித்தடங்கள் இந்நாட்டில் தான் உள்ளது… உலகில் முதன்முதலில் விண்ணுக்கு ராக்கெட் அனுப்பியதும், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பியதும் ரஷ்யா தான். பார்லி, ஓட்ஸ் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ரஷ்யா, சூரியகாந்தி விதை மற்றும் கோதுமை ஏற்றுமதியிலும் முன்னணியில் இருக்கிறது.
இங்குள்ள Baikal ஏரி தான் உலகிலேயே மிக தாழ்வான பகுதியில் இருக்கும் ஏரி.. பூமியின் ஒட்டுமொத்த நன்னீரில் இங்கு 20 சதவிகிதம் இருக்கிறது. 1700 வகையான தாவரங்கள், விலங்கினங்கள் இங்கே வசிக்கின்றன.. இங்குள்ள உயிரினங்களில் 3 ல் 2 பகுதி விலங்கினங்கள் வேறெங்குமே காண முடியாதவை. பெரும்பாலான காலங்களில் ஏரி உறைந்தே காணப்படுகிறது.
மாஸ்கோவில் இருக்கும் பிரபல இரட்டையர் உணவு விடுதி இது.. இங்கே பணியாற்றும் அனைவரும் இரட்டையர்களே என்பது குறிப்பிடத்தக்கது… இரட்டையர்கள் ஒரே மாதிரி உடையணிந்திருப்பதால், இங்கே சாப்பிட வருபவர்கள் அதிசயிப்பது நிச்சயம்..
உலகின் அதிகம் மாசடைந்த பகுதிகளில் 6 ம் இடத்தில் இருக்கிறது இந்நாட்டில் இருக்கும் Norilsk பகுதி. இங்கிருக்கும் ஏராளமான தொழிற்சாலைகளால் காற்றும், நிலமும் அதிகம் மாசடைந்திருக்கிறது.. காற்றில் சல்பர் கலந்திருப்பதால், பனி கூட கருப்பாக பெய்வதாக கூறுகிறார்கள். எண்ணெய் வளத்தில் உலகின் முதல் நாடாக இருக்கும் ரஷ்யா, எரிவாயு உற்பத்தியில் உலகின் 2 வது நாடாக இருப்பது குறிப்பிடத்தக்து.
Discussion about this post