டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருக்கும் நில உரிமையாளர்களுக்கான அபராதத்தை இரண்டு மடங்கு அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது
சென்னையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பூட்டிய வீடுகள், திறந்தவெளி பகுதிகளை தீவிரமாக கண்காணித்து கொசு ஒழிப்பில் ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு 2 மடங்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை நிலவேம்பு குடிநீர் வழங்க அவர் அறிவுறுத்தினார்.
Discussion about this post