தெலுங்கு முன்னணி நடிகரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தார். முதலமைச்சர் ஜெகன்மோகன், சால்வை அணிவித்து அவரை வரவேற்றார். அண்மையில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த சாய்ரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பில் சிரஞ்சீவியுடன் அவரது மனைவி சுரேகா மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
Discussion about this post