சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு செயல்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்பினர் மற்றும் போதகர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்பினர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிறிஸ்தவ மக்கள் நேசிக்கும் இயக்கம் அதிமுக என்றார். இந்திய அளவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ள மாநிலம் தமிழகம் என்றும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post