தமிழகத்தில் நவம்பர் 25ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்ற பணிகள் ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமின்றி இணைதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நிக்குதல், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post