மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து; வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா வழியாகக் சட்டிஸ்கரை அடையும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மத்திய, தெற்கு வங்ககடல் பகுதிகள் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post