ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 11ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post