சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களைக் குறி வைத்துத் திருடியவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் உதவுவது போல் நடித்துப் பலரிடம் மோசடியில் ஈடுபட்ட சரவணன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பணம் எடுத்துத் தருவது போல், அவர்களின் ரகசிய எண்ணைத் தெரிந்து கொண்டு, ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். பின்னர் வேறொரு மையத்திற்குச் சென்று பணத்தை எடுத்து வந்துள்ளார்.
இது குறித்து வந்த புகாரையடுத்து சிசிடிவி காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சரவணன் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post