மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சீன அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தமிழ் மற்றும் சீன மொழியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடத்தை சீன அதிபருடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் அலைவாய்க் கோவில், இந்தியக் கலாசாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது என்றும் ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் காண வேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூணன் தபசு என்று கூறியுள்ள பிரதமர் மோடி, இது மகாபாரதக் கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரம், உயிர்த்துடிப்பு மிக்க ஊர் என்றும், வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம் என்றும் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. pic.twitter.com/8zhgLe2Kcb
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
Discussion about this post