மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க பல வரி சீர்திருத்தங்களை செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதல் ரபேல் பேர் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில், இரு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க பல வரி சீர்திருத்தங்களை செய்ய இந்தியா தயாராக உறுதியளித்துள்ளார்.
Discussion about this post