தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி, ஆன் லைன் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் வெளியிட்ட தள்ளுபடி விற்பனையில் 6 நாட்களில் 19 ஆயிரம் கோடி வரை வர்த்தகமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என அதிரடி ஆஃபர்களை அறிவித்தது. அந்த வகையில், கடந்த 6 நாட்களில் 19 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும். மேலும், அதிகபட்ச வாடிக்கையாளர்களை பிடித்து, அமேசான் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில், மக்கள் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்கும் நிலை குறைந்து ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்றும், தீபாவளி பண்டிகையில் மட்டும், 39 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனையாகும் எனவும் இ-காமர்ஸ் நிறுவனமான ரெட்ஸீர் தெரிவித்துள்ளது.
Discussion about this post