கடலூர் மாவட்டம், பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜூ என்ற பட்டதாரி இளைஞர், தமிழக அரசின் கால்நடை திட்டம் மற்றும் ஆலோசனைகளை பயன்படுத்தி நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது நாட்டுக்கோழி வளர்ப்புமுறை. இதனை கடலூரை சேர்ந்த ராஜூ என்ற பட்டதாரி இளைஞர் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். இவர், அரசு கால்நடை அதிகாரிகளின் ஆலோசனையின் படி கோழிகளுக்கு இயற்கை முறையில் தீவனங்கள் கொடுத்து வருவதால் கோழிகளுக்கு எந்த நோயும் எளிதில் வருவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தனது கோழி பண்ணையில் குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி, அசில்கோழி, கடக்நாத் என்னும் கருங்கால் கோழி என பல வகையான கோழிகளை வளர்த்து, முட்டைகளை மின் விளக்கின் மூலம் பொறிக்கும் முறையை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.தமிழக அரசின் பல்வேறு கால்நடை திட்டங்கள், ஆலோசனைகள் பெற்றதால் கோழி பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கும் ராஜூ அரசுக்கு நன்றி தெரிவித்தார் .
Discussion about this post