வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சட்ட அமைச்சகம் தீவிர பரிசீலனை செய்து வருகிறது.
நாடு முழுவதும் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கும், ஒரே நபர் பல வாக்காளர் அடையாள அட்டை பெறுவதை தடுத்திடவும், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2015-ம் ஆண்டில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை எளிதில் நீக்க முடியும் என்றும், எதிர்காலத்தில் வாக்களிக்கும் முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து ஆராய இந்த நடவடிக்கை உதவும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.
Discussion about this post