பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கின் பாதுகப்பு கருதி மாமல்லபுர பாரம்பரிய சிற்ப வளாகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், தலைவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மாமல்லபுர பாரம்பரிய சிற்ப வளாகங்களை மூடப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், அர்சுணன் தபசு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். வரும் 13ம் தேதி இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றம், நடைபாதை அமைத்தல், பூங்கா அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல், பாதுகாப்பு கருதி பிரதமர் மற்றும் சீன அதிபர் தங்கும் இடத்திலிருந்து வழித்தடம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post