பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்து காலணியை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேவைப்படும் இடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post