வீட்டின் பூட்டை உடைத்து பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிகரணை பரமேஷ்வரன் தெருவை சேர்ந்தவர் முனி உசைன். கடந்த செப்டெம்பர் 24 ஆம் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகையை கொள்ளையடித்தனர். இதேபோல் பள்ளிகரணை அம்பாள் நகர் பகுதியில் அம்சவல்லி என்பவர் நடந்து செல்லும்போது அவரிடம் இருந்த 1.5 சவரன் தங்க நகையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். மேலும் பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் அரசன்கழனியில் பபிதா என்பவர் வீட்டை உடைத்து 4 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துள்ளனர். சென்னை பள்ளிகாரணை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களும், செயின் பறிப்புகளும், இருசக்கர வாகனங்களை திருடுவதும் அதிகரித்துள்ளது.
பள்ளிகாரணை காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வந்த நிலையில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்வின்சன்ட் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் 8 அடுக்கு ஏ பிளாக் பகுதியில் பதுங்கியிருந்த சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(எ)சுக்குகாபி, பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியை சேர்ந்த சூர்யாவிக்ரம்(எ)மெக்கானிக் சூர்யா(17), மற்றும் சீனிவாசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் மற்றுமொரு குற்றவாளியான மகபூல் பாட்ஷா(எ)பல்லு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
கைது செய்த மூவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது பல திடுகிடும் தகவல் வெளியானது. கடந்த 8 மாதமாக, பள்ளிகாரணையில் முனிஉசைன் வீடு உள்ளிட்ட பல்வேறு வீடுகளை உடைத்தும், நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பில் இந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்தவர்களிடமிருந்து 40 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, லேப்டாப், ப்ளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறியினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சாதூரியமாக கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட், உதவி ஆய்வார்கள் இளங்கனி, கண்ணன் உள்ளிட்டவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Discussion about this post