சென்னை வேளச்சேரியில் வீட்டின் கதவுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேளச்சேரி கட்டபொம்மன் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று அதிகாலை சமையலறை, படுக்கையறை மற்றும் வீட்டின் முன்பக்க கதவுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் அதிர்ச்சியடைந்த மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தீ விபத்து எதுவும் இல்லாமல் கதவுகள் திடீரென வெடித்துச் சிதறியதற்கான காரணம் குறித்து தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 30 நிமிடங்களுக்கு மேல் தண்ணீர் கொதிக்க வைத்தது அல்லது கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாரிமுத்து மற்றும் குடும்பத்தினரை வீட்டில் தங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட தடயவியல் துறையினர் முழுமையான ஆய்வுக்கான பிறகே கதவுகள் வெடித்ததற்கான காரணத்தைக் கூற முடியும் எனத் தெரிவித்தனர்.
Discussion about this post