தொலைபேசி வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மஞ்சுநாதன் என்பவர் மீது சின்னத்திரை நடிகை நிலானி புகார் கொடுத்துள்ளார்.
மதுரவாயல் அடுத்த அஷ்டலட்சுமி நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை நிலானி இவர் கணவரை பிரிந்து இரண்டு குழந்தை களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் .பின்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவரது காதலர் காந்தி லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே காதலருடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் காதலரின் சாவுக்கு நிலானி காரணம் என புகார் செய்யப் பட்டதை தொடர்ந்து அவர் கொசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது அவரது நண்பர் காப்பாற் றினார் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற போது அவருக்கு உதவிய அவரது நண்பர் காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன். இவர் செல்போனில் ஆபாசமாக பேசி தனுக்கு மிரட்டல் விடுப்பதாக நிலானி கொடுத்த புகாரின் பேரில் போரூர் போலீசார் மஞ்சு நாதனை கைது செய்து உள்ளனர்.
Discussion about this post