செப்டம்பர் மாதம் ஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் கடந்த மாதம் 15ம் தேதி சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 28க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமானதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திராவை சேர்ந்த ஜி.வி.ஹர்ஷகுமார் என்பவரது சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் படகு விபத்தில் காணாமல் போனவர்களையும், மாயமான படகையும் கப்பல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு ஆணையத்தின் உதவியுடன் மீட்டெடுக்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் படகுப் பயணம் தொடர்பாக பொதுவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post