வைகை அணையில் இருந்து வரும் 9ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் ஒருபோக பாசன நிலங்களுக்கும் நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிகளவு மகசூல் பெற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post