வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. தென்மேற்கு பருவமழை நிறைவடையும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வட மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதேபோல தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post