திருப்பதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளில் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலிலிருந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட சூடி கொடுத்த மாலை திருப்பதியை சென்றடைந்தது. இதனையடுத்து சூடி கொடுத்த மாலை மற்றும் கிளியுடன் கருட வாகனத்தில் பவனி வந்த மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த குழுவினர் நிகழ்த்திய கலைநிழச்சிகள் பொது மக்களை விகுவாக கவர்ந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post