ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 4 ஆம் தேதி உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், விலங்குகள் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத் தூதுவராக போற்றப்பட்ட பிரான்சிஸ் அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள்மீது அன்புகொண்ட ஆர்வலராக விளங்கினார். அவற்றைக் காப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுத்தார்.
கி.பி.1181 ஆண்டு பிறந்தார் அசிசி. இவரின் நினைவு நாள் சரியாக கணக்கிடப்படாததால், அவருக்கு வாழ்த்து கூறும் தினமே விலங்குகள் தினமாக சமூக ஆர்வாலர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தன்மையைப் பொறுத்தே, ஒவ்வோர் இடத்தின் சூழலியல் மண்டலமும் இயங்குகிறது. விலங்குகள்தான் மனிதனைப் பாதுகாத்து, மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடொன்று இணைந்த சூழல் இருந்தால்தான், மனிதன் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த முடியும்.
இப்போதைய காலகட்டத்தில், விலங்குகளுக்கு மனிதர்களாகிய நாம் தீமை செய்யாமல் இருந்தாலே போதும், விலங்குகள் தங்களைத் தங்களே பாதுகாத்துக்கொள்ளும். நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது, குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். ஐந்தறிவு உடைய விலங்குகளை, ஆறறிவு உடைய நாம் பாதுகாப்பது நமது கடமை.
Discussion about this post