இங்கிலாந்தில் உள்ள நீச்சல் குளத்தில் தவறி விழுந்த மூஸ் எனப்படும் மான் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகமாக வாழக்கூடிய மான்களில் ஒன்று மூஸ் மான். இந்த வகையான மான் இனங்களிலேயே மிகவும் அதிகம் கொண்டவை. இந்த மான் சுமார் 8 அடி உயரமும், 700 கிலோ எடையும் கொண்ட இந்த வகையான மான்கள் மனிதர்களை கடுமையாக தாக்கும் தன்மை கொண்டவை. சில சமயங்களை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவது வழக்கம்.
இந்நிலையில் இங்கிலாந்தில் நியூ ஹாம்ப்ஷையர் என்ற இடத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு தண்ணீர் குடிக்க மூஸ் மான் ஒன்று வந்துள்ளது. அந்த மான் எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்தது.
உடனே அந்த நீச்சல் குளத்தின் உரிமையாளர் வனத்துறையினருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். உடனே அந்த இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணிநேரம் போராடி அந்த மூஸ்மானை மீட்டனர்.
Discussion about this post