சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 793 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 636 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு, 20 காசுகள் குறைந்து 49 ரூபாய் 10 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை, 200 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Discussion about this post