சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 8 நாட்களுக்குப் பிறகு பூமி திரும்பிய முதல் அரேபிய விண்வெளி வீரரான ஹசா அல்-மன்சூரியை அந்நாட்டு மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த மாதம் 25ம் தேதி புறப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் அரேபிய விண்வெளி வீரரான ஹசா அல்-மன்சூரியும் பயணித்தார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற சென்ற முதல் அரபு வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பியது. அதல் அல் மன்சூரியுடன், சர்வதேச விண்வெளி மையத்தில் 203 நாட்கள் தங்கி பணியாற்றிய நாசா வீரர் நிக் ஹாக், ரஷ்ய வீரர் அலெக்சே ஓவ்சின் ஆகியோர் பூமி திரும்பினர். இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 8 நாட்களுக்குப் பிறகு பூமி திரும்பிய முதல் அரேபிய விண்வெளி வீரரான ஹசா அல்-மன்சூரியை அந்நாட்டு மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
Discussion about this post