தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னிலையில் இருக்கும் ஜியோ நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் ஜியோ நிறுவனம் ரூ.1500 மதிப்புள்ள 4ஜி மொபைலை ரூ.699 க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சலுகை விலை 2ஜி மொபைலின் விலையை விட குறைவாகும் எனவும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 4ஜி மொபைல் பயன்படுத்தும் தடைகள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மொபைலை வாங்கினால் ரூ.700 மதிப்புள்ள சலுகைகளும் கிடைக்கும் எனவும், வாடிக்கையாளர்கள் செய்யும் முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்கள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post