மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்த, கதர் ஆடைகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கதரின் பயன்பாடு சுதேசியின் அடித்தளமாகும்” என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை நினைவு கூர்ந்துள்ளார். கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவிக்க தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் ஆண்டு முழுவதும் அனைத்து கதர் ரகங்களும் 30 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் வரிகளை நினைவில் கொண்டு நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்த, கதர் ஆடைகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post