பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி உறவில் எந்த பிளவும் இல்லை என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருமழிசை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக, குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆண்டுக்கு 3ஆயிரத்து 200 வீடுகள் என்ற முறையில், 3 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 600 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்படும் என தெரிவித்தார். இந்த வீடுகள் தனியார் கட்டித்தரும் வீடுகளை விட குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
Discussion about this post