சென்னைகொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்
சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக கழிவுநீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 348 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வந்த கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் கிடைக்கும் சுத்திகரிப்பட்ட நீரானது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post