ரஷ்யா கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில், பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு சீசனில் 16-வது பந்தயமாக நடந்த ரஷ்யாவின் கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில், முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில், நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மன் வீரர் வெட்டல் பின்தங்கினார். ஆஸ்திரேலிய வீரர் ரிக்கியார் டோவை மற்றொரு வீரர் முந்திச் செல்ல முயன்றதால், இரு கார்களும் மோதிக் கொண்ட நிலையில், மற்றொரு வீரரான க்ராஸ்ஜீனின் கார் கால்வாயில் விழுந்தது.
இதையடுத்து, 309 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இலக்கை, ஒரு மணி 33 நிமிடம் 38 வினாடிகளில் கடந்து, மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் வெற்றி பெற்றார். நடப்பு சீசனில் 9 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற அவர், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post