பிரபல இருசக்கர வாகன நிறுவனமான பெனெல்லி தனது முதல் ‘ரெட்ரோ’ ஸ்டைல் Bike-ஐ வரும் தீபாவளிக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘Imperiale 400’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வண்டியின் வடிவமைப்பு 1950ல் வெளியான ‘பெனெல்லி Motobi’மாடலை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு அமைப்பையும் பார்த்தால் “Royal Enfield” வகை பைக்குகள் போல் உள்ளது.
3 வருடங்களுக்கு அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டி, சிவப்பு மற்றும் கருப்பு நிறம், 373சிசி ஒற்றை என்ஜின் உடன் 5 speed ட்ரான்ஸ்மிஷன் போன்ற சிறப்பம்சங்கள் கொண்டதாகவும் உள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் அமைந்துள்ள பெனெல்லி நிறுவனத்தின் கிளைகளில் இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.4000 செலுத்தி “பெனெல்லி Imperiale 400” பைக்குகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post