சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் இந்தியா, சிங்கப்பூர் இடையே நடைபெற்ற ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தமிழகத்தின் காலை உணவான இட்லி, வடை, சாம்பர் ஆகியவை உற்சாகம் தருவதாகவும், தமிழகத்தின் விருந்தோம்பல் மிகவும் சிறந்தது என்றும் தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பத்தில் எதிர்கால சாவல்களை எதிர்கொள்ள ஹேக்கத்தன் போட்டி உதவும் என்றும், ஒவ்வொருவரும் ஒரு வெற்றியாளர் தான் எனவும் கூறினார். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 5 லட்சம் கோடி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், இந்தியாவின் புதுமையான சிந்தனைகள் வறுமையை போக்க உதவும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post