2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற வடமாநில இளைஞரை திருப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் மனோஜ் என்பவர் மணி டிரான்ஸ்பர் கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியிற்றி வரும் அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த சமீர்காந்தி சக்மா என்பவர் ஐந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து தனது உறவினர்களுக்கு பணம் அனுப்ப முயன்றார். அப்போது அந்த ரூபாய் தாள் மீது மனோஜுக்கு சந்தேகம் எழுந்ததால் வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சமீர்காந்தி சக்மாவை பிடித்து விசாரித்ததில் அவர் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துரையினர் 14 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் தாள்களை பறிமுதல் செய்தனர்.
Discussion about this post