இந்திய மற்றும் உலகப் பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்து, 38 ஆயிரத்து 822 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல், தேசியப் பங்கு சந்தை குறியீடான நிப்டி, 58 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 512 புள்ளியாக வர்த்தகம் நிறைவடைந்தது. உலக பங்கு சந்தைகள் இன்று ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
அமெரிக்க பங்குச் சந்தை குறியீடான நாஸ்டேக் 8 ஆயிரத்து 30 புள்ளிகளுடனும், லண்டன் பங்குச் சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 429 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்குச் சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 637 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஜெர்மனி பங்குச் சந்தை குறியீடான DAX, 12 ஆயிரத்து 383 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 878 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுற்றது. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 954 புள்ளிகளுடனும், சீனப் பங்குச் சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 932 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
Discussion about this post