நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் என்ற தகவலை தொடர்ந்து, தற்போது வெளிநாட்டில் கல்யாணம் என்று தகவலும் பரவி வருகிறது.
தென்னிந்திய சினிமா துறையில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நயன்தாரா .தற்போது விஜய்க்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு தயாராகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இணைந்த நயன் -விக்னேஷ் சிவனுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் ,இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர் . பின்பு அடிக்கடி வெளிநாடு சென்று அங்கிருந்து ஜோடியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர்.
மேலும் தனது காதலிக்காக தயாரிப்பாளராக களம் இறங்கிய விக்னேஷ் சிவனின் ‘நெற்றிக்கண்’ படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். சினிமா துறையில் பிஸியாக இருவரும் வலம் வந்தாலும் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை தங்கமே “ என்று விக்னேஷ் சிவன் பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் திருமணத்தை வட இந்தியாவில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா? என்று இருவரும் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கிறார்கள் .
Discussion about this post