சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீரரான டேனி அர்னால்டு, கரடு முரடான மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
புகழ்பெற்ற இத்தாலிய ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் ஏறிய சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேனி அர்னால்டு, கயிறு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின் உதவியும் இல்லாமல், 550 மீட்டர் உயரம் கொண்ட மலையில் விறுவிறுவென ஏறி சாதனை படைத்துள்ளார். மலை ஏறுவதில் திறமைசாளியான இவர், ஆபத்தான செங்குத்து மலையில், சாதாரண சமதள பாதையில் நடப்பதைபோல ஏறியுள்ளார். கைகளை லாவகமாக மலையில் ஊன்றி, முன்னேறிச் சென்று, 46 நிமிடம் 30 விநாடிகளில் மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார். ஐரோப்பிய வடக்கு மலைப்பகுதிகளில் நான்கு முறை தனியாக ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமையையும் டேனி அர்னால்டு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post